28 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப் படும் என்பது போலி வாக்குறுதி – இம்ரான் எம்.பி

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப் படும் என்று தேர்தல் மேடைகளில் போலி வாக்குறுதி வழங்கப் படுகின்றது என திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்  இம்ரான் மகருப் தெரிவித்தார்.

திருகோணமலை கிண்ணியா நகர சபை மைதானத்தில்  (15) மாலை  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது

நாட்டில் தற்போது வலுவான ஊழல் ஒலிப்பு சட்டங்கள் உள்ளன. இதன் மூலம் இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பலப் படுத்தப் பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தான் முன்னாள் அமைச்சர் பௌசி போன்றோர் அண்மையில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப் பட்டனர் 

தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திஸாநாயக்க தன்னிடம் 400 பேரின் ஊழல் சம்பந்தமான பைல்கள் இருப்பதாக தெரிவித்தார்.

அப்படியாயின் ஏன் இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இது தொடர்பாக முறைப்பாடு எதுவும் செய்ய வில்லை என்று கேட்க விரும்புகின்றேன்.

தற்போது தகவல் பல தன்னிடம் இருப்பதாக கூறும் அவர் அது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காது அதிகாரம் கிடைத்த பின் நடவடிக்கை எடுப்பேன் என்று குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது.

எனவே அதிகாரம் கிடைத்தால் கூட ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டார் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

உண்மையில் அவர் இந்நாட்டில்  ஊழல் ஒழிய வேண்டும்  என்று விரும்புவாராயின் தன்னிடம் உள்ள ஆதரங்களுள் சிலதையாவது இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் அவர் நடவடிக்கை தயாராகிறார் என்று நம்ப முடியும். 

இதனை விடுத்து மக்களை ஏமாற்றுவதற்காக வெறுமனே மேடைகளில் வாக்குறுதி வழங்குவதில் எந்த பலனும் இல்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்

Related posts

புதிய பாடசாலை தவணை தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு..!

sumi

தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்க்கு வாக்களிக்கவேண்டும்..! வேந்தன் கேரிக்கை.

User1

நாட்டிலுள்ள 14 இலட்சம் அரச ஊழியர்களின் மூளைகளும் சலவை செய்யப்பட்டுள்ளன !

User1

Leave a Comment