27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

மூவரை பலியெடுத்த லொறி – முச்சக்கர வண்டி விபத்து

இன்று (27) காலை நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுல்கல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் மரணமடைந்துள்ளனர்.

நாரம்மலவிலிருந்து கிரிஉல்ல நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, இரண்டு பெண் மற்றும் ஆண் ஒருவர் உள்ளிட்ட 3 பயணிகளும் படுகாயமடைந்து நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முச்சக்கரவண்டியில் பின்னால் பயணித்த ஆண் நபர் உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சாரதி மற்றும் காயமடைந்த இரு பெண்களும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிகிச்சை பெற்று வந்த சாரதி அதனைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ஆண்கள் களனி மற்றும் வத்தளை பிரதேசங்களைச் சேர்ந்த 50, 53 வயதுடையவர்கள் எனவும், உயிரிழந்த பெண் களனி, தலுகம்கொட பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மற்றைய பெண் குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொழும்பில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் மன்னார் யூசி மாஸ் (UCMAS) கல்வி நிலையத்திலிருந்து பங்கு பற்றிய மாணவர்கள் சாதனை

User1

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு : ரணில் உறுதி

User1

கரிநாள் போராட்டத்துக்கு தமிழ்மக்கள் கூட்டணி பூரண ஆதரவு

sumi

Leave a Comment