27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியை அகழ்வதா? பெப்ரவரி 22 இல் நீதிமன்றம் முடிவெடுக்கும்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் இனங்காணப்பட்டிருந்த மனிதப்புதைகுழியை மீண்டும் அகழ்வது தொடர்பான விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றில் பெப்ரவரி 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மார்ச் மாதம் முதலாம் திகதி மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்தன. ஆனால் அதற்கான சாதக நிலைகள் உள்ளனவா என்று ஆராய்வதற்காகவும், அகழ்வுக்கான நிதியொதுக்கீடு சரியானவகையில் மேற்கொள்ளப்படுமா என்று பரிசீலிக்கவும் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது எனத் தெரியவருகின்றது.
இந்த அகழ்வுப்பணிக்கான நிதியை விடுவிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் மெத்தனப்போக்கை கடைப்பிடிப்பதும், குறித்த மனிதப்புதைகுழி வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக சிறிலங்காவை விட்டே தப்பித்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

User1

மாங்குளம் அம்புலன்ஸ் சேவை மூன்று மாதமாக இடைநிறுத்தம்.!

sumi

கரிநாள் போராட்டத்துக்கு தமிழ்மக்கள் கூட்டணி பூரண ஆதரவு

sumi

Leave a Comment