27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பொலிஸார் தாக்கியதாக முறைப்பாடு செய்த இளைஞரிற்கு நேர்ந்த கதி

வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த கட்டளையை வழங்கியுள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையான அவரை நீதிமன்றின் ஊடாக மறுவாழ்வு முகாமுக்கு அனுப்புமாறும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் குறித்த நபர் பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமை தொடர்பில் ஆசிரியர்கள், மாணவிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்து நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறும் அவர் பணித்துள்ளார்.

நேற்றையை தினம் வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை போக்குவரத்து விதி மீறியதாக வழிமறித்து வீதியில் வைத்து தாக்கியதுடன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றும் தாக்கினார்கள் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் பல்கலைக்கழக மாணவன் முறைப்பாடு வழங்கியிருந்தார்.

அதுதொடர்பில் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயிலில் மோதி இளைஞர் பலி

User1

‘மதபோதனை’ – தற்கொலை முயற்சி தொடர்வதால் பரபரப்பு

sumi

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் விமான நிலையத்தில் வர்த்தகர் கைது !

User1