27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

90 குடும்பங்களுக்கு பால் பைக்கட்டுகள் வழங்கல்

ஜனாதிபதி செயலகம் ஊடாக நடை முறைப்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பால் மா பைக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
IMG 20240207 WA0016
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க (06) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த பால் மா பக்கட்டுக்களை பொன்டெறா நிறுவனத்தின் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட 90 குடும்பங்களுக்கு ஒருவருக்கு தலா 02 பைக்கட்டுக்கள் வீதம் மொத்தமாக 180 பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன. மந்தபோசணையுடைய பிள்ளைகளின் போசாக்கினை அதிகரிக்கும் நோக்கில் இவை வழங்கி வைக்கப்பட்டன.
இதில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,தம்பலகாமம் இரானுவ முகாம் மேஜர் டபிள்யூ.எம்.சீ. வன்னிநாயக்க ,நிர்வாக உத்தியோகத்தர் உடகெதர உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பொகவந்தலாவ டின்சின் பாடசாலையில் அதிபர் உயர்தர மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டமை குறித்து ஆர்ப்பாட்டம்

User1

வட மாகாண கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் டகள்ஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்

User1

முல்லையில் இளம் பெண்ணுக்கு எயிட்ஸ்!! 35 க்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவு!! நடந்தது என்ன??

sumi