28 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மலைநாட்டு நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாகக் குறைவு.!

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.

குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவான 120 அடியை விட 13 அடி குறைந்து இன்றைய தினம் 107 அடியில் நீர் உள்ளது.

காசல்ரீ நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 8 அடி குறைந்து உள்ளது ஏனைய நீர்த் தேக்கங்களான கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, கலுகல,விமலசுரேந்திர, மேல் கொத்மலை ஆகிய நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடர்ந்து மலையகப் பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும் பட்சத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

Related posts

733 சந்தேகநபர்கள் ‘யுக்தியவில்’ கைது

sumi

கண்டி நகரை சுற்றுலா நகராக மாற்ற திட்டம் ; ஜனாதிபதி

User1

07 குடியிருப்பாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் தண்டம்

sumi