27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

பெண் வைத்தியர் மீது துஷ்பிரயோகம்; சக வைத்தியர் கைது!

மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (8) கைது செய்யப்பட்டதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 45 வயதுடைய திருமணமான வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் வைத்தியரின் தந்தை அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் ஆண் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வைத்தியர் வேறு வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெற்று கடந்த 5ம் திகதி அரநாயக்க மாவட்ட வைத்தியசாலைக்கு பணிக்காக வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியர் மற்றும் அப்போது கடமையில் இருந்த 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண் வைத்தியர் கேகாலை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர் கைது

sumi

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து செங்கொடிசங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் கருத்து

User1

அரச சேவை சம்பள மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்

User1