28.6 C
Jaffna
November 10, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

மரம் விழுந்ததில் மரணமான சிறுவனின் உடல் நல்லடக்கம்.!

கம்பளை முன்பள்ளியில் மரம் விழுந்து படுகாயமடைந்த நிலையில்,  கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த, சிறுவன் மரணமடைந்தார். அவரது  ஜனாஸா, கம்பளை கஹடபிட்டியவில், சனிக்கிழமை (10) இரவு  இடம்பெற்றது. 

மரம் விழுந்த சம்பவத்தில், ​அதே பாடசாலையில் கல்விக்கற்ற சிறுவன், சம்பவ தினத்தன்று ஸ்தலத்திலேயே மரணமடைந்தார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டாவது மாணவனான சிறுவன், கம்பளை, கஹடபிட்டிய, பேபில பிரதேசத்தில் வசிக்கும் மொஹமட் இக்ரம் ஹையானின் (வயது 5) சிறுவனின் ஜனாஸாவே நல்லடக்கம் செய்யப்பட்டது.  இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இந்த சிறுவன் இளையவர்.

  கம்பளை பென்ஹில் சர்வதேச பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள், வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த பெரிய மரமொன்று  விளையாட்டு மைதானத்தில் விழுந்து மூன்று சிறுவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

மற்றுமொரு சிறுவன், தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாரதியின் வடமாகாண வெற்றிக்கிண்ணம் சென்மேரிஸ் வசம்

User1

சிங்களக் கட்சிகளை தாயகத்தில் அனுமதிப்பது ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும்….!

User1

ரயில் மோதி சிறுவன் உயிரிழப்பு

sumi