27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்யாழ் செய்திகள்

பணி இடமாற்றத்தால் ஏற்பட்ட மனவிரக்தியால் அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு!

பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா (வயது 49 திருமணமாகவில்லை) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்தது. ஆகையால் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் இன்றையதினம் அவரது இல்லத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

User1

ஆனையிறவு விபத்தை ஏற்படுத்திய அரச பேருந்து சாரதிக்கு அதிக மதுபோதை – மேலும் ஒருவர் உயிரிழப்பு!

sumi

பொகவந்தலாவ டின்சின் பாடசாலையில் அதிபர் உயர்தர மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டமை குறித்து ஆர்ப்பாட்டம்

User1