27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

கல்வி அமைப்பில் புதிய பாடதிட்டம்-சற்று முன் வெளியான தகவல்..!

கல்வி அமைப்பில் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

02.10.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய மூலோபாயம் மற்றும் திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பணிக்குழு அளித்த பரிந்துரைகளின்படி கற்கை நெறி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அந்த முன்னோடித் திட்டங்களின் ஒரு பிரிவாக சாதாரண கல்வி முறைமையில் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவதற்கான  செயற்திட்டம் அமுல்படுத்தப்படும்.

மைக்ரோசொப்ட் ஆதரவுடன் கீழ்க்கண்டவாறு முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

* தேசிய கல்வி நிறுவனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மைக்ரோசொப்ட்  தற்போது செயல்படுத்தி வரும் சர்வதேச பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்தல் மற்றும் தேவையான அடிப்படை மனித வளங்களைக் கொண்ட பாடசாலைகளில் 8 ஆம் வகுப்பிலிருந்து முன்மொழியப்பட்ட முன்னோடித் திட்டத்தைத் தொடங்குதல்.

* மைக்ரோசொப்ட் வழங்கும் வசதிகளின் கீழ் முன்னோடித் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குதல்.

* தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பாடத்தை கற்பிக்கும் 100 ஆசிரியர்களுக்கு மைக்ரோசொப்ட்  நிறுவனத்தினால் பயிற்சியாளர்களாக பயிற்சி பெறுதல்.

Related posts

விவசாய பேப்பரை அவுட்டாக்கின வாத்திக்கு சிறை

sumi

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு தமிழ் வேட்பாளர்

User1

உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்..!

sumi