27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

பாடசாலையில் திடீரென சுகயீனமுற்ற 18 மாணவர்கள்-நடந்தது என்ன..?

ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் 18 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

வெல்லவாய – மல்வத்தாவல பகுதில் உள்ள பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு திடீர் சுகயீனமடைந்துள்ளனர்.

அப்பாடசாலையில் பயிலும் 18 மாணவர்கள் தோல் அரிப்பு மற்றும் உடலில் தழும்புகள் ஏற்பட்டு சுகயீனமடைந்துள்ளனர்.

இதனையடுத்து சுயீனமடைந்த மாணவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை என வெல்லவாய ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்கு 54,000 பொலிஸார் 

User1

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து தடை

User1

யாழ்.பல்கலை மாணவன் மீது பொலிஸார் கொலைவெறித்தாக்குதல்!

sumi