27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப் பற்று அபிவிருத்தி கூட்டம்..! {படங்கள்}

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (14.02.2024) பிற்பகல் 12 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கரைதுறைப்பற்று பிரதேச சபை பிரதேச செயலாளர் ம.உமாமகள்  பாராளுமன்ற உறுப்பினர்களது பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், பிரதேச சபையின் செயலாளர், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள்,  கிராம சேவையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை, யானை வேலி அமைத்தல், வீதி வேலைகள் , வீடு, காணி பிரச்சினைகள் அத்தோடு தனியார் பேருந்து வழியனுமதி பத்திரங்களை புதுப்பித்தல், கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்ததுடன்

விரிவாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அபிவிருத்தி குழு தலைவரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

IMG 20240214 14410118 IMG 20240214 14414932 IMG 20240214 14404069

Related posts

உலகின் முக்கிய சுற்றுலாத் தலமாக மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்படும் !

User1

கொழும்பில் கூடவுள்ள மாவட்டத் தேர்தல் அதிகாரிகள்

User1

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 66 நாட்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் : தேர்தல் ஆணையகம்

User1