28 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

இலங்கையில் முகநூல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

இலங்கையில் முகநூல் தொடர்பில் கடந்த 2023ம் ஆண்டில் 31,548 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஸ்ட பாதுகாப்பு பொறியியலாளர் சாருக அமுனுபொல தெரிவித்துள்ளார்.

இவற்றில் அதிகளவான முறைப்பாடுகள் முகநூல் ஊடாக பெண்களை துன்புறுத்திய சம்பவங்கள் தொடர்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான 10774 சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியுள்ளதுடன்,

போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 5188 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அனுமதியின்றி முகநூல் கணக்குகளுக்குள் பிரவேசித்தமை தொடர்பில் 7499 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிதி மோசடிகள் தொடர்பில் 1609 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, குருணாகல், கம்பஹா மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் இவ்வாறான அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

Related posts

வாழைச்சேனையில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு !

User1

ஆடை தைக்க சென்ற சிறுமியை, கடைக்குள் வைத்து துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது

sumi

இந்திய முட்டைகள் மீண்டும் விற்பனைக்கு

sumi