28 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்

சிங்கராஜ வனம் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை

சிங்கராஜா வனப்பகுதியை பார்வையிட இந்த ஆண்டு அதிகளவான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக வன பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில், 35,000 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ள நிலையில், அதிகளவான வருமானம்  ஈட்டப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் அரசாங்கக் கணக்குகள் தொடர்பான குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய போது இது தொடர்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வன பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, வர்த்தமானி மூலம் வெளியிடப்படாத 2 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் காடுகளை விரைவில் வர்த்தமானி மூலம் வெளியிடுமாறு வனப் பாதுகாப்புத் துறைக்கு அரசு கணக்குக் குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Related posts

சந்திரிக்காவின் ஆதரவு யாருக்கு ? அறிவிப்பு வெளியானது !

User1

ஊஞ்சல் கயிறு இறுக்கி சிறுவன் மரணம்.!

sumi

குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக அரசாங்க அதிபருடனான சந்திப்பு..!

User1

Leave a Comment