27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காட்டில் நேற்று பிடிக்கப்பட்ட 30000Kg குஞ்சு மீன்கள்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்ட விரோத தொழிலாளர்களால் நேற்று இரவு மாத்திரம் 30 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான சிறிய மீன்கள் பிடித்து அழிக்கப்பட்டுள்ளது.

ஐம்பது படகுகளுக்கும் மேல் நேற்று 05.08.2024 சட்டவிரோத மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற படகுகள் பல்லாயிரக்கணக்கான மீன்களுடன் கரைக்கு வந்த போதும் கடற்படையினர் அவர்களை கைது செய்ய தவறியதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்று மாலை கடலுக்கு சென்ற சட்ட விரோத படகுகளை அவதானித்த சிறு தொழிலாளர்கள் கடற்படையிடம் தெரிவிக்க முயன்ற போதும் முடியாமல் போய் விட்டதாக தெரிவித்துள்ளனர்.

வெற்றிலைக்கேணி கடற்படையின் புதிய அதிகாரி பொறுப்பேற்றதன் பின்னர் மக்கள் கடற்படையிடம் முறைப்பாடு அளிப்பதற்கான வழிகளை மூடி விட்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


தமக்கு அழைப்பெடுக்கவோ,முறைப்பாடு அளிக்கவோ வேண்டாம் தாம் கைது செய்வோம் என கூறி விட்டு கடற்படையே சட்ட விரோத தொழிலாளர்களை அனுமதிப்பது புலப்படுவதாக தெரிவித்த மீனவர்கள் இன்றும் கட்டைக்காட்டில் இருந்து சட்டவிரோத தொழிலுக்கு ஐம்பதிற்கும் அதிகமான படகுகள் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

கடற்படையின் அதிவேக டோரா படகுகள் கடலில் நிற்கும் போதே சட்டவிரோத படகுகள் கடலுக்கு செல்லும் காணொளி வெளியாகியுள்ளமை தமது குற்றச்சாட்டுக்களை மேலும் உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

Related posts

சீனி வரி குறைப்பு விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

User1

மக்களை ஏமாற்றுவதை கைவிடுங்கள் ; சமஸ்டிக் கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்க முடியுமா – சபா குகதாஸ் சவால்

User1

க.பொ.த சாதாரணதர மற்றும் க.பொ.த உயர்தர கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு யாழில் மாபெரும் கல்விக் கண்காட்சி!

User1

Leave a Comment