28.7 C
Jaffna
November 10, 2024
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

19 இந்திய மீனவர்கள் விடுதலை – 9 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

31 இந்திய மீனவர்களுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது ஜூன் 22ஆம் திகதி 3 படகுகளில் எல்லை தாண்டி வந்து கைதான 22 மீனவர்களில் 19 பேர், ஆறு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். அத்துடன் படகோட்டிகள் மூவரும் தலா 40 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் 1 வருட கடூழிய சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அடுத்ததாக ஜூலை 23ஆம் திகதி கைதான 9 மீனவர்கள் ஏற்கனவே ஒருதடவை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகை இரண்டாவது தடவையாகவும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் இம்மாதம் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

காதலர் தினத்தில் சிறுவர்கள் தொடர்பில் சற்றும் வெளியான எச்சரிக்கை தகவல்..!

sumi

இப்படியும் ஒரு சோதனை

sumi

மலையகத்தில் மற்றுமொரு சோகம்-ஒருவர் பலி..!

sumi

Leave a Comment