27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலையான வைத்திய அர்ச்சுனாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அமோக வரவேற்பு.

மன்னார் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் புதன் (7)  நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர்

அர்ஜுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள்  அமோக வரவேற்பை வழங்கினர்.

கடந்த வெள்ளிக்கிழமை(2) இரவு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுல் அத்து மீறி  நுழைந்து கடமைக்கு  இடையூரை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் மன்னார் போலீஸ் நிலையத்தில் வைத்தியசாலை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வைத்தியர் அர்ச்சுனா மன்னா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட வைத்தியர் சனிக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது அவரை இன்றைய தினம் 7ஆம்க்ஷ திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம்(7) குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைத்தியர் அருச்சுனா மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.

வைத்திய சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அண்ரன் புனித நாயகம் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றில்  முன்னிலையாகி இருந்தனர்.

சார் நீங்களே மேற்கொண்ட மன்னார் நீதவான் நிபந்தனையின் அடிப்படையில் தலா 50,000 ரூபாய் இரு கற்பனையில் பைத்தியம் பிணையில் செல்ல அனுமதித்தார்.

இந்த நிலையில் மன்றில் இருந்து வைத்தியர் வெளியேறிய போது மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு முன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி வரவேற்றனர்.

பின்னர் மன்னார் மாவட்ட மக்கள் வைத்தியரை மன்னார் பொது விளையாட்டு மைதான பகுதிக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related posts

ஜனாதிபதி ரணில் ராஜபக்ஸக்களுக்கு பயந்தவர் தமிழருக்கு எதுவும் தரமாட்டார்: தலைவர் கலாநிதி. கா.விக்கினேஸ்வரன்

User1

நாட்டில் பல கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் கைது

User1

இந்து இளைஞர் மன்றத்தின் காணியை அபகரிக்க முயற்சி

sumi

Leave a Comment