29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

கண்டி நகர எல்லைக்குள் 11 நாட்கள் இறைச்சி மதுபான கடைகள் பூட்டு : வெளியான அறிவிப்பு

கண்டி (Kandy) எசல பெரஹராவை முன்னிட்டு நாளை (10) முதல் பதினொரு நாட்களுக்கு கண்டி நகர எல்லையிலும் மற்றும் அதனைச் அண்மித்துள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெரஹரா வீதி பவனி வரும் பத்தாம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி பெரஹரா தினத்தன்று வரை மதுபானக்கடைகள் மூடப்படும் எனவும், மேலும் குறித்த அக்காலப்பகுதியில் நட்சத்திர உணவகம் மற்றும் உணவகங்களில் மதுபானம் விற்பனை செய்வதுடன் மதுபானம் அருந்த அனுமதி வழங்க முடியாது எனவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இதற்கு மேலதிகமாக கண்டி நகர எல்லையிலுள்ள இறைச்சி மற்றும் மீன் விற்பனைநிலையங்களை இந்த காலப்பகுதியில் மூடுமாறு கண்டி மாநகர சபை அறிவித்துள்ளது.

மேலும், கண்டி நகரிலிருந்து யாசகம் கேட்பவர்கள் மற்றும் தெருநாய்கள் என்பனவற்றை அகற்றுவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் திருமதி இந்திகா அபேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

User1

ராஜபக்ச குடும்பத்திற்குள் முறுகல் : நாட்டை விட்டு வெளியேறும் பசில்

User1

யாழில் தொடர் காய்ச்சலால் குடும்பப் பெண் உயிரிழப்பு !

User1

Leave a Comment