மருதங்கேணி பொலிசாரால் கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது
சட்டவிரோதமான முறையில் ஒளிபாய்ச்சி மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் அனுமதியற்ற குறித்த வலையே இன்று பொலிசாரின் சுற்றிவளைப்பில் மீட்கப்பட்டுள்ளது.
கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது தடவையாக மருதங்கேணி பொலிசார் சட்டவிரோத சுருக்குவலை ஒன்றை கைப்பற்றியுள்ளனர்
கைப்பற்றப்பட்ட சுருக்குவலை தற்பொழுது மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் நேற்று முன்தினமும் கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுருக்குவலையை திரும்ப பெறுவதற்காக சட்டவிரோத தொழிலாளர்கள் சிலர் முயற்சிப்பதாகவும் நீதிமன்றில் முற்படுத்தி கைப்பற்றப்பட்ட வலைகளை எரியூட்டுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மீனவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்