29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

தோட்ட தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும கொடுப்பனவுகள் !

மலையக பெருந்தோட்ட பகுதியில் லயன் வீடுகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்களையும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வேலைத் திட்டத்தில் உள்வாங்குவதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது.

லயன் வீடுகளில் வசிக்கும் வெவ்வேறு குடும்பங்களை தனித்தனியே, இந்தத் திட்டத்தில் உள்வாங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெருந்தோட்டத்துறையில் தோட்டங்களில் தனி வீடுகள் இல்லாதிருப்பதால், தோட்டத் தொழிலாளர்கள் கூட்டாக ஒரே லயன் வீடுகளில் வசிக்கின்றனர்.

தற்போதைய நடைமுறைக்கமைய வெவ்வேறான குடும்ப எண்ணிக்கைகளைக் கருத்திற் கொள்ளாமல், லயன் அறைகளில் வாழ்கின்ற அனைத்து நபர்களும் ஒரே குடும்ப அலகாக கருதப்படுகின்றனர்.

இது அந்தக் குடும்பங்களுக்கு பாதகமானது என்பது உணரப்பட்டுள்ளது. இந்நிலையில் 2022 ஆண்டின் 01 இலக்க நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு கட்டளைகளின் பிரகாரம், அஸ்வெசும முன்மொழிவுத் திட்டத்திற்கு தகைமைகளை நிர்ணயிக்கும் போது லயன் வீடுகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு, செயலாற்றுமாறு நலன்புரி நன்மைகள் சபைக்கு உத்தரவிடுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

24 மணித்தியாலத்தில் 11 சிறுமியருக்கு நேர்ந்த கதி!

User1

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதாந்தம் 20,000 ரூபா வழங்கி வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டம் !

User1

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு நன்கொடை வழங்கிய இலங்கை வீராங்கனை

User1

Leave a Comment