29.2 C
Jaffna
September 20, 2024
இந்திய செய்திகள்யாழ் செய்திகள்

இராணுவத்தினருக்கு அஞ்சலி

விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட இந்தியப் படையினரின் நினைவாக பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

1987 ஆம் ஆண்டிலிருந்து 1990 வரை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றன.

இந்த மோதல்களில் கொல்லப்பட்ட இந்திய படையினர் நினைவாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மலரஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் யாழ். இராணுவ தலைமையகத்தின் இராணுவ உயரதிகாரிகள், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரங்கத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணத்திள்ள இராணுவத்தினர் கலந்துகொண்டனர்.

Related posts

கேவில் வீதியைப் புனரமைக்க கோரிக்கை..!

sumi

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாவா

sumi

தள்ளிப்போனது சூர்யாவின் கங்குவா ரிலீஸ்! 

User1

Leave a Comment