29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பெருவிழா

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கப்பலேந்தி மாத ஆலய வருடாந்திர திருவிழா நேற்று  15.08.2024 காலை இடம்பெற்றது.

புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அடிகளார் தலைமையில் காலை 5 . 45 மணிக்கு குறித்த திருவிழா திருப்பலி ஆரம்பமானது.

திருவிழா திருப்பலியில் அருட்தந்தை பத்திநாதர் அடிகளார்,அருட்தந்தை ரமேஷ் அ.ம.தி,புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரியின் விரிவுச் செயலாளரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமாகிய அருட்தந்தை ஜெயரஞ்சன் அடிகளார்,புனித பிரான்சிஸ் சவேரியார் குருமட விரிவுரையாளர் அருட்கலாநிதி கபில்ராஜ் அடிகளார்,மற்றும் கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் ஆகியோர் பெருவிழாவில்  கலந்து கொண்டனர்.

திருவிழாவின் இறுதியில் அன்னை மரியாள் ஆலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பவனியாக கடற்கரை வீதியூடாக வலம் வந்தார்,

இந்த திருவிழா திருப்பலியில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பக்த அடிகளார்கள் வருகை தந்து அன்னையை தரிசித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மூடப்பட்டது புதிய களனி பாலம்.!

sumi

போலியான அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுகள் குறித்து எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை

User1

யாழில் ஐஸ்கிறீமில் இருந்த தவளை விவகாரம்-நீதிமன்றில் நடந்தது என்ன..?

sumi

Leave a Comment