27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் தீவிர முயற்சியில் ரணில் அரசாங்கம்

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக பாரிய திட்டம் செயல்படுத்தப்படும். இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக நாம் செயற்பட்டு வருவதோடு, இந்த நாட்டில் சமூக சந்தை பொருளாதார அமைப்பை உருவாக்குவோம்.

தற்காலிகமாக சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு உயர்ந்தால் மக்கள் வாழ முடியாது.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை நவதாராளவாதக் கொள்கையாகும். ஆனால், நிவாரணங்களை வழங்கும் பொருளாதார முறைக்குப் பதிலாக, மக்கள் சொந்தக் காலில் நிற்கக்கூடிய பொருளாதாரத்தை நாங்கள் ஏற்படுத்துவோம்.

கைத்தொழில், தொழிநுட்ப உற்பத்தி மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்ளுர் கைத்தொழில்களை மேம்படுத்துவதுடன் எதிர்காலத்தில் இந்நாட்டில் பாரிய பொருளாதார மாற்றமும் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

Related posts

சத்திர சிகிச்சை தவறினால் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை: உறவினர்கள் கடும் குற்றச்சாட்டு

User1

டிக்டொக் வீடியோக்களை அனுப்பி 45 இலட்சம் மோசடி ; யாழில் மூன்று பெண்கள் கைது

User1

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக துப்பாக்கி வழங்க நடவடிக்கை

User1

Leave a Comment