27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

தேர்தல் நெருங்கும் காலத்தில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

சரியான பொருளாதார மாற்றமின்றி நெருக்கடியை தீர்க்கும் வேலைத்திட்டத்தை பாதியில் நிறுத்தினால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,”எவராலும் தீர்க்க முடியாத பொருளாதார நெருக்கடியை தன்னால் தீர்க்க முடிந்தாலும், சரியான பொருளாதார மாற்றமின்றி நெருக்கடியை தீர்க்கும் வேலைத்திட்டத்தை பாதியில் நிறுத்தினால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.

சில கட்சிகள் உள்ளூர் பொருளாதாரம் பற்றி பேசுகின்றன நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண புதிதாக சிந்தித்து கட்சி பேதமின்றி புதிய வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும்.

அதற்காக ஒரு பெரும் குழு என்னுடன் இருக்கின்றனர். அதனால் தான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்துள்ளேன்

கடந்த 75 வருட கால ஆட்சியாளர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக எதனையும் செய்யவில்லை என சில தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். அது சரியல்ல.

இருப்பினும் நாடு, கடந்த 75 வருடங்களாக முன்னெடுத்துச் சென்ற சித்தாந்தங்கள் காரணமாகவே நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியவில்லை.

எனவே இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தமது எதிர்காலம் குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.” என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.    

Related posts

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் முன் பதற்றம்..!

sumi

சாரதிக்கு இழப்பீடு.. பொலிஸ் அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

sumi

இராஜாங்க அமைச்சரின் வாகன விபத்து – விசாரணைகளில் திருப்பம்!

sumi

Leave a Comment