27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

தொலைக்காட்சி நேர்காணலில் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் எம்.பிக்கள்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மோதிக் கொண்டுள்ளனர்.

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் (Palani Digambaram) மற்றும் வேலுகுமார் (Velukumar) ஆகியோர் இவ்வாறு நிகழ்ச்சியின் இடை நடுவில் மோதிக் கொண்டுள்ளனர்.

 தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கக் கூடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa)  ஆதரவு வழங்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

எனினும், தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், கட்சியின் தீர்மானத்தை மீறி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe) ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் உள்ளக மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஒருவர் மாற்றி ஒருவர் பொது வெளிகளில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை துரோகி என பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

இந்தநிலையில், இவர்கள் இருவரும் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய போது வாக்குவாதம் தீவிரமடைந்து அது மோதலில் முடிவடைந்துள்ளது.

இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ள நிலையில், வேலுகுமாரைப் பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் “பார் குமார்” என்று கிண்டலடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   


Related posts

பத்து வாள்களுடன் இருவர் கைது

User1

அராலியில் கடைக்கு முன்னால் நின்ற இளைஞர்கள் மீது தாக்குதல்!

User1

வடமராட்சி கிழக்கில் சங்கு சின்னத்திற்கு வலுக்கும் ஆதரவு

User1

Leave a Comment