28 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நிலச்சரிவுகள், பாறை உடைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும், தேவையேற்ப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற தயாராக இருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவில் அதிகளவு மழை பெய்யும்.

எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

பிறந்து 45 நாட்களேயான குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயார் கைது!

User1

யாழ் வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும்-பரிசோதனையும்..!{படங்கள்}

sumi

யானையின் சடலம் மீட்பு-உரிமையாளர் கைது

sumi

Leave a Comment