27.9 C
Jaffna
September 20, 2024
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவராகும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) புதிய தலைவராக பதவியேற்கவுள்ளார்.

தற்போதைய தலைவர் கிரெக் பார்க்லேயின் பதவி காலம் எதிர்வரும் நவம்பரில் நிறைவடைவதை அடுத்தே ஜெய் ஷா அந்த பதவியை ஏற்கவுள்ளார்.

இந்த பதவிக்காக, ஜெய் ஷா,  இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைகளின் ஆதரவைப் பெற்றுள்ளார்,

முன்னதாக ஜக்மோகன் டால்மியா (1997 முதல் 2000 வரை) மற்றும் ஷரத் பவார் (2010-2012) ஆகிய இருவர் மட்டுமே கடந்த காலங்களில் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத் தலைவர்களாக பதவி வகித்துள்ளார்கள்.

பார்க்லே 2020 நவம்பரில்  ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டார். 2022 இல், அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போதைய இயக்குநர்கள் 27 ஆகஸ்ட் 2024க்குள் அடுத்த தலைவர் பதவிக்கான வேட்புமனுக்களை முன்வைக்க வேண்டும்.

அதேநேரம் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்தால், புதிய தலைவரின் பதவிக்காலம் 2024, டிசம்பர் 1 ஆம் திகதி அன்று ஆரம்பமாகும் வகையில் தேர்தல் நடத்தப்படும்.

ஐசிசி விதிகளின்படி, தலைவர் தேர்தலில் 16 வாக்குகள் உள்ளன,

இதில் வெற்றியாளருக்கு ஒன்பது வாக்குகள்  மாத்திரமே (51%) தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

Related posts

ராகுலுக்கும் இஷானுக்கும் பனிப்போர்

sumi

நியூசிலாந்திற்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

User1

U19 அணியில் ராகுல் டிராவிட்டின் மகன்

User1

Leave a Comment