29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

வாக்கு அட்டைகள் விநியோகம் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பம் !

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த விநியோகம் இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.

அன்றைய தினம் வீட்டிலேயே தங்கி அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

வீடு வீடாகச் சென்று வாக்கு அட்டைகள் விநியோகம் செப்டம்பர் 14 ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும் அதன் பிறகு வீடு வீடாகச் சென்று வாக்கு அட்டைகள் விநியோகம் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தல் நாள் வரை, அவர் கடிதங்களைப் பெறும் தபால் நிலையத்திற்குச் சென்று, சாதாரண நேரங்களில் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தி, தனது கையொப்பத்தைப் பயன்படுத்தி தனக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகளை பெற முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 17,140,280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 1,148,258 பேர் புதிய வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பொகவந்தலாவ டின்சின் பாடசாலையில் அதிபர் உயர்தர மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டமை குறித்து ஆர்ப்பாட்டம்

User1

தமிழ்க் கடலை தமிழரே ஆள வேண்டும் – தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் விளக்கம்

User1

கொஸ்கொடை கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

User1

Leave a Comment