27.9 C
Jaffna
September 20, 2024
விளையாட்டுச் செய்திகள்

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள கென்ட் பிரீமியர் லீக் கரப்பந்தாட்ட போட்டி

கென்ட் பிரீமியர் லீக் (Kent Premier League) என்னும் மாபெரும் ‘OverGame’ கரப்பந்தாட்ட போட்டி ஒன்று இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் கென்ட் (Kent) பகுதியில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கான முன்னேற்பாடாக வீரர்களை ஏலமுறையில் தெரிவு செய்யும் நிகழ்வு எதிர்வரும் 24.08.2024 அன்று தென்கிழக்கு லண்டனிலிலுள்ள ‘Shooter Hill six Form College’ பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 2:30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இவ்வருடம் பத்து அணிகள் இப்போட்டிக்காக உள்வாங்கப்படுகிறது.

இதில் மூன்று வளர்ந்து வரும் அணிகள் ஏற்கனவே போட்டியின்றி தெரிவாகி தற்போது ஏழு புதிய அணிகளுக்காக விளையாடவுள்ள வீரர்கள் புள்ளிகளை அடிப்படையாக கொண்டு ஏலமுறையில் தெரிவு செய்யப்படவுள்ளனர். 

இந்த ஏலமுறையானது, பணத்தினை கொண்டு வீரர்கள் தெரிவு செய்யப்படாமல், அணிகள் ஒவ்வொன்றுக்கும் தலா 1000 புள்ளிகள் வழங்கப்பட்டு, இப்புள்ளிகளை அடிப்படையாக கொண்டு, ஒவ்வொரு அணிகளுக்குமான வீரர்களை அந்தந்த உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

சமநேரத்தில் இந்நிகழ்வை நேரலைமூலம் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

யூடியூப் தளத்தில் புதிய சாதனையை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

User1

U19 அணியில் ராகுல் டிராவிட்டின் மகன்

User1

விராட் கோஹ்லியை விமர்சித்த தினேஷ் கார்த்திக்

User1

Leave a Comment