சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண் பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் தெய்வீக இன்னிசை விருந்தாக,
செல்வி சைந்தவி கேதீஸ்வரன் (இசைகலைமணி, அண்ணா பல்கலைக்கழகம்)
அவர்களின் தெய்வீகப் பாடல்களுடன்,வயலீன் – எஸ்.கோபிதாஸ் ( விரிவுரையாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)
கீபோட் – இன்னிசைக் கலைமணி நடேசு செல்வச்சந்திரன்
மிருதங்கம் – நுண்கலைமாணி எஸ்.துரைராசா
தபேலா – கலாவித்தகர் மகேந்திரம் பிரபா ஆகிய அணிசெய் கலைஞர்களுடன், இன்னிசை விருந்து காலை 10.30 மணி தொடக்கம் 11.45 மணி வரை சிறப்பாக இடம்பெற்றது.
உதவித்திட்டங்களாக, சிறுப்பிட்டி மேற்கு நாகதம்பிரான் ஆலய திருவிழாவை முன்னிட்டு, 500 கிலோ அரிசி, 25கிலோ பருப்பு , மரக்கறி வகைகள், 50,000 ரூபா நிதி நவிண்டில் ஞானவைரவர் அறநெறிப் பாடசாலைக்கு,
05 செற் வாங்கு, மேசை, 50,000 ரூபா நிதி இவ் உதவித்திட்டங்களினை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் வழங்கி வைத்தார்.