27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளிலான கண்காட்சி இன்று நல்லூரில் ஆரம்பம்

யாழ் பல்கலைக்கழகத்தின் வடமாகாண நீர் பாதுகாப்பு செயற்றிட்டமும் (WASPAR), இளைய நீர்த்துறையாளர் வட்டம் (YWP) ஆகியவற்றின் ஏற்பாட்டில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்களம், நீர்வளச் சபை உள்ளிட்ட பல்வேறு நீர் சார்ந்த அரச திணைக்களங்களும், அமைப்புகளும் இணைந்து பங்கேற்ற “நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” என்கிற தொனிப்பொருளிலான கண்காட்சி யாழ்ப்பாணம் நல்லூரில் ஆரம்பமானது. 

நல்லூர் பெருந்திருவிழாவை ஒட்டி மக்களுக்கு நீர் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு நல்லூர் முன்பாகவுள்ள யாழ். மாநகரசபையின் தீயணைப்பு படை வளாகத்தில் ஆரம்பமான இக்கண்காட்சியில் வடக்கு பிரதம செயலாளர் எஸ். இளங்கோவன், WASPAR செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ். சிறீஸ்கந்தராஜா மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளர்கள், பொதுமக்கள், நீர் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள குறித்த கண்காட்சியில் நீர் சார்ந்த ஆய்வு விபரங்கள், விஞ்ஞான விளக்கங்கள், கலந்துரையாடல்கள், விளையாட்டுகள், இளையோர்கள் – சிறார்களுக்கான பரிசுப் போட்டிகள் என பலவகையான நிகழ்வுகளையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். 

வரைமுறையின்றி அதிகமாக குழாய் கிணறுகளை அமைப்பதன் மூலம் நன்னீர் உவர் நீராக மாற்றப்படும் அபாயம் தொடர்பிலும், வடக்கிற்கான ஆறு தொடர்பிலான விளக்கங்களும், நீரில் என்னென்ன பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமாக நீரில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து கொள்ளவும் இக்கண்காட்சி உறுதுணையாக இருப்பதாக கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

Related posts

மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் விழுந்தவர் உயிரிழப்பு!

User1

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை !

User1

மன்னார் நானாட்டானில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து- இளம் தாய் காயம்.

sumi

Leave a Comment