27.9 C
Jaffna
September 20, 2024
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ 

நடிகரான தனுஷ் இயக்குநராகவும் படங்களை இயக்கி வருகிறார். அவரது இயக்கத்தில் வெளியான ‘ப பாண்டி’, ‘ராயன்’ ஆகிய இரண்டு படங்களும் வணிக ரீதியாக வெற்றியை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இவரது இயக்கத்தில் தயாராகும் மூன்றாவது திரைப்படமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எனும் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எனும் திரைப்படத்தில் தனுஷின் உறவினரான பவிஷ் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

இவருடன் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், அன்பு தாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் முன்னணி நட்சத்திர நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். இதனுடன் படத்தின் இயக்குநரான தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

லெனின் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு இசை அசுரன் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடல் எதிர்வரும் முப்பதாம் திகதியன்று வெளியிடப்படும் என படக் குழுவினர் பிரத்தியேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.

தனுஷ் – ஜி வி பிரகாஷ் கூட்டணியில் உருவாகுவதால் இந்த பாடலுக்கு திரையிசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 

Related posts

சுமார் 3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

sumi

இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க பயிற்சியாளர் நியமனம்

User1

ஜீவா நடிக்கும் ‘பிளாக்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

User1

Leave a Comment