27.9 C
Jaffna
September 20, 2024
உலக செய்திகள்

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் கமலா ஹரிஸ் செய்த புதிய சாதனை!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் (Kamala Harris), தேர்தல் பிரசாரத்திற்காக, கடந்த ஒரு மாதத்தில் ரூ.4,528 கோடி நிதி திரட்டி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் (US presidential election) எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸ் போட்டியிடுவதுடன், குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார்.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹரிஸ் படைத்துள்ளார்.

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதுடன், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.

Related posts

யாகி’ சூறாவளியால் மியன்மாரில் 100இற்கும் அதிகமானோர் பலி!

User1

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன் மரணம்.!

sumi

ஜோர்தானில் இருந்து நாடு திரும்பிய 66இலங்கையர்கள்

sumi

Leave a Comment