27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

யுக்திய நடவடிக்கை : போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 657 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில்  657 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 649 ஆண்களும் 08 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 13 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள  04 பேரை புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்களிடமிருந்து 122 கிராம் 799 மில்லி கிராம் ஹெரோயின், 801 கிராம்  983 மில்லி கிராம் ஐஸ் மற்றும்  566 கிராம்  275 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தினால் நாடு தழுவிய யானைகள் சனத்தொகைக் கணக்கெடுப்பு

User1

கரிநாள் போராட்டத்துக்கு தமிழ்மக்கள் கூட்டணி பூரண ஆதரவு

sumi

ஒலுவில் அக்/அல்-ஹம்றா மாணவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கான ஒருநாள் பயிற்சி நெறி.

User1

Leave a Comment