27.9 C
Jaffna
September 20, 2024
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘லப்பர் பந்து’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடிக்கும் ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் மாரி செல்வராஜ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லப்பர் பந்து’ எனும் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், ‘அட்டகத்தி’ தினேஷ், சுவாஸிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ,காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவதர்ஷினி, ஜென்சன் திவாகர், டி எஸ் கே உள்ளிட்ட படர் நடித்திருக்கிறார்கள்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் றோல்டன் இசையமைத்திருக்கிறார். துடுப்பாட்டத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லட்சுமண் குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றதுடன் சர்வதேச அளவில் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது என்பதும், ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் ‘லப்பர் பந்து’ தயாராகி இருக்கிறது என்பதும், இந்த திரைப்படம் உள்ளூர் துடுப்பாட்டத்தை முன்னிலைப்படுத்தி  உருவாகி இருக்கிறது என்பதும், படத்தின் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒலிம்பிக் பளுதூக்குதலில் பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா

User1

பங்களாதேஷ் – இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்: பிரதான பந்துவீச்சாளர்கள் விலகல்

User1

இலங்கை அணி சிறந்த கிரிக்கெட்டை ஆடியது..ரோஹித் சர்மா பேட்டி..

User1

Leave a Comment