27.9 C
Jaffna
September 20, 2024
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இந்திய போர் கப்பல் நாட்டை விட்டுச் சென்றது

இந்திய கடற்படையின் முன்னரங்க போர்க் கப்பலான ஐ.என்.எஸ். மும்பை மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு  வியாழக்கிழமை (29) நாட்டை விட்டு சென்றது.

மேற்கு கடற்படைக் கட்டளைக் கடற்கரையில் இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் கஜபாகு கப்பலுடனான பயிற்சிக்குப் (PASSEX) பின்னர், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றைய தினம் புறப்பட்டுள்ளது.

ஐ.என்.எஸ். மும்பை மூன்று நாள் விஜயமாக 26 ஆம் திகதி காலை கொழும்புதுறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் சம்பிரதாயபூர்வமான வரவேற்பு வழங்கப்பட்டது. 

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த Destroyer வகையின் ஐ.என்.எஸ். மும்பை (INS Mumbai) என்ற கப்பல் 163 மீற்றர் நீளமும் 410 கடற்படையினரை கொண்டுள்ளது. 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டெல்லி ரகத்தைச் சேர்ந்த நாசகாரி கப்பல்களில் மூன்றாவது கப்பல் ஐஎன்எஸ் மும்பை ஆகும்.

மஸ்கன் டொக் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இக்கப்பலுக்கு மும்பை நகரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு பெயர் சூட்டப்பட்டது.  

இக்கப்பல் அதன் தரமுயர்த்தல் பணிகளின் பின்னர் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி விசாகபட்டினத்தில் உள்ள கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளை பிரிவிடம் சேவையில் இணைக்கப்பட்டது.

கொழும்பில் ஐஎன்எஸ் மும்பை தரித்து நிற்கும் காலத்தில் இருகடற்படையினரதும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளும் இலக்குடன் இலங்கை கடற்படை அதிகாரிகள் இக்கப்பலுக்கு விஜயம் செய்து அனுபவப் பகிர்வு செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் சந்தீப் குமார் (Captain Sandeep Kumar) மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கு இடையில் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றது.

அத்துடன் விளையாட்டுகள், யோகா மற்றும் கரையோரம் சுத்தமாக்கும் பணிகள் போன்ற கூட்டு செயற்பாடுகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து குறித்த கப்பல் விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்டது.

Related posts

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

User1

மொனராகலையில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

User1

பத்தனை நகரில் தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு

User1

Leave a Comment