27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிதாக தெரிவாகும் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய நாடாளுமன்ற தேர்தலுக்கான அழைப்பு விடுக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 66 நாட்களின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக தெரிவாகும் ஜனாதிபதி தனக்கு பொருத்தமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என நினைத்தால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.

அவ்வாறு நடந்தால் ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்புமனுக்கள் கோரப்பட்டு 66 நாட்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும் என ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு

User1

ஆசிய கிண்ண கால்பந்து தொடரில் கம்போடியாவை வீழ்த்தியது இலங்கை

User1

நடிகர் விஜய்க்கு வாழ்த்துச் சொன்னார் நாமல்

sumi

Leave a Comment