29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorizedயாழ் செய்திகள்

தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மனம் என்பது கூட்டு தீர்மனமே! : ப.சத்தியலிங்கம்

தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மானம் என்பது கூட்டு தீர்மானே என கட்சியின் பொதுதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் கூட்டடத்தின் பின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்து இருந்தார். அதனை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மறுப்பு தெரிவித்து அது கட்சியின் தீர்மானம் இல்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கட்சியின் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்து கொள்ளவில்லை. மத்திய குழுத் தீர்மானம் என்பது ஒரு கூட்டுத் தீர்மானம். மத்திய குழுவில் 30 பேர் கலந்து கொண்டார்கள். மாவை சேனாதிராஜா அவர்களுக்கும் அறிவித்து அவரும் வருவதாக இருந்தார். உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்து அவர் கலந்து கொள்ளவில்லை.

மூத்த துணைத் தலைவர் தலைமையில் தான் கூட்டம் நடைபெற்றது. மத்திய குழுவின் தீர்மானம் தான் சஜித் பிரேமதாச அவர்கக்கு அதரவு வழங்குவது என்பது. அதனையே அறிவித்தோம். எதிர்வரும் 4 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு. அதனால் தீர்மானம் எடுக்கப்பட்டது. அவருடன் ஏற்பனவே நான் கதைத்துள்ளேன். இது தொடர்பாக நான் கதைக்கிறேன்.  மூத்த துணைத்தலைலவர் யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து மாவை சேனாதிராஜா அவர்களுடன் கதைப்பார் எனத் தெதரிவித்தார் 

Related posts

5 நாட்களுக்கு மேல் விடுமுறை எடுக்கும் அரச ஊழியர்களுக்கு சிக்கல்: புதிய சுற்றறிக்கை வெளியானது

User1

யாழில் சற்று முன் மற்றுமொரு கோர விபத்து..!{படங்கள்}

sumi

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை இரத்துச் செய்ய தீர்மானம் !

User1

Leave a Comment