27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆட்டகை இன்று உத்தியோக பூர்வமாக தமது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த 16 வருடங்களாக குருவாக, உதவி ஆயராக அதனைத் தொடர்ந்து ஆயராக மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் கடமையாற்றி தமதுஓய்வு நிலையினை கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை திருத்தந்தையிடம் அறிவித்ததனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மறைமாவட்டத்தினை பரிபாலிப்பதற்காக திருத்தந்தையினால் கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயர் கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை மறைமாவட்டத்தின்
அப்போஸ்தலிக்க பரிபாலகராக கடந்த 19.08.2024 திகதி நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 02.09.2024 திகதி தமது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

புதிதாக அப்போஸ்தலிக்க பரிபாலகராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை அவர்களை மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் இருந்து ஓய்வு நிலை ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து பாண்டு வாத்திய அணிவகுப்புடன் புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திற்கு அழைத்து செல்லப்பட்டதனைத் தொடர்ந்து மரியாள் பேராலயத்தில் பதவியேற்பினை முன்னிட்டு விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இந் நிகழ்வுகளில் மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் ஜோச் ஜீவராஜ் அடிகளார், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஐஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், 243 வது படைப்பிரிவின் கட்டளை தளபதி விறிக்கேட் கொமாண்டர் சந்திம குமாரசிங்க, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், விமானப்படை உயரதிகாரிகள் உள்ளிட்ட சர்வ மத தலைவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பொது நிலையினர். பங்குகளின் பங்கு மேற்புப் பணிச்சபை உறுப்பினர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்துள்ளனர்.

Related posts

சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கிடைக்காது விட்டால் வைத்தியசாலைக்கு முன் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

User1

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – கட்சியின் தலைவர் ரிஷாட் அறிவிப்பு!

User1

எரிபொருள் தட்டுபாடு-வெளியான புதிய சிக்கல்..!

sumi

Leave a Comment