29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் பலி , நால்வர் வைத்தியசாலையில் அனுமதி !

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (02) பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பயிரிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.

அநுராதபுரம், தன்னாயன்குளம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மிஹிந்து மாவத்தை, பரசன்கஸ்வெவ பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த போது, ​​நண்பருடன் கருத்து வேறுபாட்டில் இருந்த சிலர் அவரது வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, இரு குழுக்களும் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலில் காயமடைந்த இரு தரப்பையும் சேர்ந்த நான்கு பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரசன்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ரத்கம, சிறிகந்துரவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த நபர் ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரலஜயபுர சிறிகந்துரவத்த பிரதேசத்தில் வசித்து வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில்  முஸ்லிம் பயிலுனர்கள், உத்தியோகத்தர்கள் தொழுகைக்கு பள்ளிவாயல் செல்ல அனுமதி மறுப்பு – ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்.

User1

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு !

User1

எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்- வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு !

User1

Leave a Comment