27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

அழகு நிலையத்திற்கு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்: தேடுதல் உத்தரவு பிறப்பிப்பு

மினுவாங்கொடை நகரிலுள்ள அழகு நிலையமொன்றில் ஏற்பட்ட தலைமுடி உதிர்வு சம்பவம் தொடர்பில் அழகு நிலைய உரிமையாளரையும், உதவியாளர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் டி தேனபந்து தேடுதல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நேற்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அழகு நிலையத்தில் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்களின் வகைகளை சரிபார்த்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் நுகர்வோர் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை நகரிலுள்ள அழகு நிலையமொன்றுக்கு தலைமுடியை சீர்செய்வதற்காக சென்ற பெண்ணொருவர் திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கடுமையான முடி உதிர்வு ஏற்பட்டு கம்பஹா பொது வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொரகொடவத்தை பகுதியைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதுடைய பெண் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் அழகு நிலைய உரிமையாளரையும், உதவியாளர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னர் அழகு நிலைய உரிமையாளரும் அவரது உதவியாளர்களும், அழகு நிலையத்தை மூடிவிட்டு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Related posts

நீர் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி வௌியானது !

User1

மன்னார் மாவட்ட பிரச்சினைகளுக்கு கோட்டபயவே காரணம்: ரிஷாட் சாடல்

User1

கிளி /பளை மத்திய கல்லூரி மாணவ சாரணர்களுக்கான சின்னஞ்சூட்டும் வைபவம்! 

User1

Leave a Comment