27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்உலக செய்திகள்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் தலையிடப்போவதில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் தலையிடப்போவதில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலை நெருங்கிக்கொண்டிருக்கின்ற தருணத்தில் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற ரஸ்யாவின் நிலைப்பாட்டை இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யன்மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

நாங்கள் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை,நாங்கள் உங்களுக்கு விரிவுரைசெய்வதில்லை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என தீர்மானிப்பது உங்கள் மக்களை பொறுத்தவிடயம் என ரஸ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் உங்கள் தெரிவை மதிப்போம் நீங்கள் தெரிவு செய்யும் எந்த ஜனாதிபதியுடனும் இணைந்து பணியாற்றுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அமைதியான தேர்தல் நடைபெறுவதற்கான தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ரஸ்ய தூதுவர், புதிய ஜனாதிபதியும் நடுநிலைமை கொள்கைகளை பின்பற்றுவார் ரஸ்யாவுடன் நட்புறவை பேணுவாபு என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் சமநிலையான,நடுநிலையான வெளிவிவகார கொள்கைக்கு ரஸ்ய தூதுவர் தனது  பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Related posts

காங்கேசன் துறைமுகத்திற்கு விஜயம் செய்த இந்திய தூதுவர்..! {படங்கள்}

sumi

மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்

User1

டெஸ்ட் போட்டிக்காக இலங்கை வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி

User1

Leave a Comment