27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மக்கள் முடிவு:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் வெற்றி அலைக்கான நிலைப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம் சுபைர் தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம் சுபைஇர் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தார்

நாட்டிலுள்ள மூவின மக்களும் எதிர்க்கட்சித் தலைவரை தேர்தலில் வெற்றி பெறச் செய்யும் பணிகளை எமது கட்சியுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலும் அவரது வெற்றியை உறுதி செய்ய இங்குள்ள அரசியல் தலைமைகளுடன் ஒன்றிணைந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

நாம் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக மாவட்டத்தின் சகல பகுதிகளுக்கும் சென்று வரும் வேலை அவரது வெற்றி அலைக்கான நிலைப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம் தேசியப் பட்டியல் மூலம் பாராளு மன்றம் வந்து ஜனாதிபதி வேட்பாளராக உள்ள ரணில் விக்கிரமசிங்கவை எவ்வாறு ஆதரிப்பது என்று மக்கள் மத்தியில் ஒரு கேள்வி உள்ளது

மாவட்டத்தில் பல பகுதிகளிலும் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துள்ளதுடன் நீண்ட நாட்களாக இடம்பெறாமல் இருக்கின்ற மாகாண சபை தேர்தலை முன்னெடுத்து. உள்ளூராட்சி சபை தேர்தலை இடம்பெற வேண்டு மென இங்குள்ள மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்

இதனை நிறைவேற்ற சஜித் பிரேமதாசாவின் வெற்றிக்கு பின்னர் இவைகளை இடம்பெறச் செய்வதற்கான வாய்ப்புள்ளது என்றார்.

Related posts

மக்களை ஏமாற்றுவதை கைவிடுங்கள் ; சமஸ்டிக் கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்க முடியுமா – சபா குகதாஸ் சவால்

User1

மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து  ஆலயங்களிலும் திருநீற்றுப் புதன் திருப்பலி..!{படங்கள்}

sumi

அதிபர் உள்ளிட்ட நான்கு பேரின் அடாவடி – ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதி

User1

Leave a Comment