27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

மது போதையில் வீடொன்றிற்குள் நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடை நீக்கம்

குருணாகல், மெல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் மது போதையில் நுழைந்ததாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுராகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,
பொலிஸ் கான்ஸ்டபிள் இரவு நேரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது தனது நண்பருடன் மது அருந்திய நிலையில் மெல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்துள்ளார்.

இதன்போது, வீட்டின் உரிமையாளர் பொலிஸ் கான்ஸ்டபிளை திருடன் என நினைத்து அவரை பிடித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இந்த பொலிஸ் கான்ஸ்டபிளை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மது போதையில் வீடொன்றிற்குள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் குருணாகல் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தினால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தென்னிந்திய பிரபலங்கள் இலங்கை வருகை.!

sumi

சுகாதார ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு-அவதியுறும் ஏழை மக்கள்…!

sumi

கொழும்பில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் மன்னார் யூசி மாஸ் (UCMAS) கல்வி நிலையத்திலிருந்து பங்கு பற்றிய மாணவர்கள் சாதனை

User1

Leave a Comment