28 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

தெங்கு செய்கைக்கு பாதிப்பு!

கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பகுதி மற்றும்  கண்டாவளை உள்ளிட்ட பல பகுதிகளில் தென்னை செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடும் வறட்சி காரணமாக வாழை, கமுகு உள்ளிட்ட பல பயிர்கள் அழிவடைந்து வரும் நிலை காணப்படுவதாக செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்பொழுது நாட்டில் தேங்காய்க்கு பெரும் கேள்வி நிலவிவரும் நிலையில், தென்னை செய்கை மேற்கொள்ளப்பட்டு எட்டு வருடம் 9 வருடம் கடந்த நிலையில் பயன்தரக் கூடிய நிலையில் இருந்த பலரது தென்னைகள் அழிவடைந்து வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேபோன்று வாழைச் செய்கையிலும் வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு கமுகு போன்றவையும் அழிவடையும் நிலையில் காணப்படுவதாவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

05 வகையான உரங்களின் விலை 4,000 ரூபாவினால் குறைப்பு !

User1

ஐனாதிபதி தேர்தல் ஒத்தி வைக்கபடுமா-அம்மையார் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

sumi

மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் விழுந்தவர் உயிரிழப்பு!

User1

Leave a Comment