27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

இலங்கை மக்களுக்கு இன்றைய தினத்தை விசேட தினமாக அறிவித்துள்ள அரசாங்கம்

இலங்கைஇன்றைய தினத்தை விசேட தினமாக அறிவித்து, வாக்காளர்கள் அட்டைகள் விநியோகம் நடைபெறவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த பணிகளை இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையில் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னர் வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

குறித்த தினங்களில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் எதிர்வரும் 18,19 மற்றும் 20ஆம் திகதிகளில் தங்களது பகுதிகளுக்கு பொறுப்பான தபால் அலுவலகத்துக்குச் சென்று தங்களது அடையாள அட்டையை காண்பித்து வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

Related posts

இந்தியாவில் ஒரேநாளில் 9 பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்கள்

User1

தரம் 5 க்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்

User1

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக் அலியின் மகன் கைது

User1

Leave a Comment