28 C
Jaffna
September 20, 2024
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்!

தளபதி விஜய் மற்றும் இளைய தளபதி விஜய் என திரையில் இரட்டை வேடத்தில் தோன்றி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ‘கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தளபதி விஜயின் ‘கோட்’ திரைப்படம் கடந்த ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் ஆறாயிரம் திரைகளில் திரையிடப்பட்டது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக பாரிய வெற்றியை சந்தித்திருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாள் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் 126 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

இதனிடையே விஜயின் ‘கோட்’  திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இதைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது என்பதும், தயாரிப்பு நிறுவனத்தின் கெடுபிடிகளால் வசூல் குறைந்தது என திரையுலக வணிகர்கள் விவரித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தொடர்ந்து விடுமுறை தினங்கள் இருப்பதால் எதிர்வரும் திங்கட்கிழமையன்று ‘கோட்’ படத்தின் வசூல் நானூறு கோடியை தொடும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

Related posts

சித்தார்த் – அதிதி திருமணம் எங்கு நடக்கிறது தெரியமா..? இதோ

User1

அத்வானிக்கு பாரதரத்னா விருது- இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

sumi

ராமர் கோவிலில் நாமல் தரிசனம்.!

sumi

Leave a Comment