27.9 C
Jaffna
September 20, 2024
உலக செய்திகள்

லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிராக ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவின் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கெதிரான 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டித்தொடர் நடைபெற்றவேளையில் பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லண்டன் – கென்னிங்ரன் ஓவல் மைதானத்தில் நேற்றைய தினம் இந்த போட்டி நடைபெற்றது.

இலங்கையில் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்றுவரும் இனவழிப்பை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தவும், பிரித்தானிய அரசாங்கம் மற்றும் சரவதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கவும் லண்டன் ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது நடைபெற்றுள்ளது.

இதன்போது “இலங்கை அணியே திரும்பி செல்”, துடுப்பாட்டப் போட்டிகளின் பின்னணியில் தமிழர் இனவழிப்பை சர்வதேசத்திடம் மறைக்காதே”, சர்வதேச கிரிக்கெட் சபையே..! – இலங்கை அணியை தடை செய்” போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது போராட்டத்தின்போது வெளிப்படுத்தினர்.

ஜெனிவாவில் 57ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருக்கின்ற நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை வெளியாகவிருப்பதனை முன்னிலைப்படுத்தியே இந்த ஆர்ப்பாட்டத்தை பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட அமைப்பு ஒன்று ஒருங்கிணைத்திருந்த நிலையில், ஏனைய பல தமிழர் அமைப்புக்களும் தமது ஒருமித்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

Related posts

இத்தாலியில் கொள்ளையடிக்க சென்ற இலங்கையரின் பரிதாப நிலை

User1

மின்னல் தாக்கி காற்பந்து வீரர் பலி.!

sumi

பிரித்தானியாவில் கலவரம் வெடிக்க காரணமான பிரதான பெண் சூத்திரதாரி கைது

User1

Leave a Comment