28 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

நாடு திரும்பினார் பாராலிம்பிக் சாதனை வீரர்

பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி புதிய உலக சாதனை படைத்து வெள்ளிப் பதக்கத்தை வென்ற தடகள வீரர் சமிதா துலான் நாட்டை வந்தடைந்தார்.

சர்வதேச பாராலிம்பிக் சம்மேலனத்தால் கடந்த 28ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை பிரான்சின் பாரிஸ் நகரில் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியின் F-44 பிரிவின் கீழ் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியை வென்றிருந்த சமிதா துலான் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அவருடன் பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட ஏனைய விளையாட்டு வீரர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தனர்.

இவர்கள் நேற்று பிற்பகல் 03.30 மணியளவில் அபுதாபியில் இருந்து எதிஹாட் விமான சேவையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

Related posts

பல்பொருள் அங்காடியில் திருடி பிடிபட்ட அரச பெண் மருத்துவர்

User1

கள்ள காதல் விவகாரம்!! கள்ள காதலியை கொன்றுவிட்டு போலீசிற்கு போன் செய்த காதலன்

sumi

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

User1

Leave a Comment