28 C
Jaffna
September 20, 2024
இந்திய செய்திகள்உலக செய்திகள்

விண்வெளியில் தனது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22ஆம் திகதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஆகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சுனிதான வில்லியம்ஸ் 2ஆவது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 19 ஆம் திகதி தனது 59 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதற்கு முன்பு, கடந்த 2012 ஜூலை முதல் நவம்பர் வரை அவர் விண்வெளியில் இருந்தபோது தன்னுடைய பிறந்தநாளை முதல்முறையாக அங்கு கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி – உலக சுகாதார மையம் அனுமதி

User1

சித்தார்த் – அதிதி திருமணம் எங்கு நடக்கிறது தெரியமா..? இதோ

User1

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்?

sumi

Leave a Comment